ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டம், நல்லாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றிற்காக அமெரிக்கா தொடர்ந்து குரல் எழுப்பி வருவதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் தெரிவித்தார்.
இலங்கை இளைஞர் முஸ்லிம் அமைப்பைச் சந்தித்த போது, ஏனைய முஸ்லிம் நாடுகளுடனான இலங்கையின் உறவை அமெரிக்க அரசாங்கம் பாராட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையை அமைதியான, ஐக்கியமான மற்றும் வளமான நாடாக மாற்றுவதற்கு இலங்கையின் இளைஞர் சமூகம் உதவுமென தூதுவர் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறை தலைவர்கள் ஏனைய சமூகங்களை மதித்து அவர்களின் தேவைகளை உணர்ந்து அவர்களுடன் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் தூதுவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் உட்பட சட்டத்தரணிகள் சமூகம் உண்மையைப் பேசுவதற்கும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கும் மேற்கொண்ட முயற்சிகளை அவர் பாராட்டினார்.