ஆசியக் கிண்ணமும் இலங்கை அரசியலும்: 15 தொடர்களில் 6 தடவைகள் வெற்றி மகுடம்!

Date:

ஆசியக்கிண்ணத்தினை இலங்கை அணி 06வது தடவையாகவும் கைப்பற்றியுள்ளது. துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

171 என்ற வெற்றியிலக்கிரனை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 147 ஒட்டங்களை பெற்று 23 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்

1984 இல்தான் முதலாவது ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் இலங்கை, இந்திய அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது.

1986 இல் நடைபெற்ற 2 ஆவது ஆசியக்கிண்ண தொடரில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று வெற்றி மகுடத்தை தனதாக்கிக்கொண்டது. ( 86 இல் இலங்கையில் ஐ.தே.க. ஆட்சி. ஜனாதிபதியாக ஜே.ஆர். பதவி வகித்தார்.)
1997 இல் நடைபெற்ற 6 ஆவது ஆசியக்கிண்ண போட்டியில், இறுதிச்சமரில் இலங்கை, இந்திய அணிகள் களம் கண்டன. இதில் 5 விக்கெட்டுகளால் இலங்கை அணி வெற்றிபெற்று, சாம்பியன் ஆனது. ( 97 மக்கள் கூட்டணி ஆட்சி. ஜனாதிபதியாக சந்திரிக்கா அம்மையார் செயற்பட்டார்.)
2004 இல் நடைபெற்ற 8 ஆவது ஆசியக்கிண்ண தொடரிலும் இலங்கை , இந்திய அணிகளே இறுதிப்போட்டிக்கு தெரிவாகின. இலங்கை அணி 25 ஓட்டங்களால் வெற்றிநடை போட்டது. (2004 இல் சந்திரிக்கா ஆட்சி)

2008 இல் நடைபெற்ற 9 ஆவது ஆசியக்கிண்ண தொடரின்போதும் இலங்கை, இந்திய அணிகளே இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.

இலங்கை அணி 100 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. ஆசியக்கிண்ண தொடரில் இறுதி போட்டியொன்றில் அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் அணியொன்று பெற்ற வெற்றி. அந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.

( 2008 இல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சி. ஜனாதிபதி மஹிந்த)
2014 இல் நடைபெற்ற 12 ஆவது ஆசியக்கிண்ண போட்டியில் இறுதி ஆட்டத்தில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் களம் கண்டன.

இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று, வெற்றிக் கிண்ணத்தை முத்தமிட்டது. (2014 இல் மஹிந்த ஆட்சி)

15 ஆவது ஆசியக்கிண்ண தொடரில் நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இலங்கை அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்று வெற்றி மகுடத்தை தனதாக்கியது.

( ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – ஐ.தே.க. ஆட்சி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.)
இந்திய அணி 7 தடவைகள் கிண்ணம் வென்றிருந்தாலும், மூன்று தடவைகள் மாத்திரமே இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

( ஆசியக்கிண்ண தொடர் அறிமுகப்படுத்தப்பட்டபோது ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர். இன்று ஜனாதிபதி. 86 இற்கு பிறகு இலங்கை கிண்ணம் வெல்லும் திருணங்களில் அவரே ஐ.தே.க. தலைவராக நீடிக்கின்றார்)

ஆர்.சனத்

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...