இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் தேர்தலில் 20,927 வாக்குகள் வித்தியாசத்தில் ரிஷி சுனக்கை வீழ்த்தி, லிஸ் டிரஸ் வெற்றி பெற்றார். இதன்மூலம், இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வானார்.
இங்கிலாந்தின் பிரதமராக இருந்த போரிஸ் ஜோன்சன் மீது பாலியல் குற்றச்சாட்டு, கரோனா காலகட்டத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடியது போன்ற விவகாரத்தால் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளானார். இதைத்தொடர்ந்து, இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இங்கிலாந்தின் பிரதமராக இருந்த போரிஸ் ஜோன்சன் மீது பாலியல் குற்றச்சாட்டு, கரோனா காலகட்டத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடியது போன்ற விவகாரத்தால் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளானார்.
இதைத்தொடர்ந்து, இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அதில், தோல்வியடைந்த போரிஸ் ஜோன்சன், கடந்த ஜூலை 7ஆம் திகதி தனது பிரதமர் பதவியில் இருந்தும், கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, கன்சர்வேடிவ் கட்சித் தலைவருக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், இந்த தேர்தலில் வெற்றிபெற்று தலைவராக பொறுப்பேற்பவர்கள், இங்கிலாந்தின் புதிய பிரதமராகவும் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில், போரிஸ் ஜோன்சனின் உதவியாளர்களான லிஸ் டிரஸ், போரிஸ் ஜோன்சன் அமைச்சரவையில் பிரிட்டன் நிதியமைச்சராக இருந்த ரிஷி சுனக் ஆகியோர் இறுதி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.
இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் என்பதில் லிஸ் டிரஸ் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இடையே கடும் போட்டி நிலவியது. நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்னர் லிஸ் ட்ரஸ் பிரிட்டனின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டார்.
இதேவேளை, இங்கிலாந்து அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன் (42) (Suella braverman) உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா, தமிழகத்தில் இந்து குடும்பத்தைச் சேர்ந்த தாயான உமா மற்றும் கோவாவில் கிறிஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்த தந்தை கிறிஸ்டி பெர்னாண்டஸ் ஆகியோரின் மகள் ஆவார்.
1960 களில் அவரது தந்தை கென்யாவிலிருந்து குடிபெயர்ந்தார், அவரது தாயார் மொரிஷியஸிலிருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார். அதன் பின்னர், 1960ம் ஆண்டு கிரேட்டர் லண்டனில் உள்ள ஹாரோ பகுதியில் சுயெல்லா பிறந்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ரால் பிராவர்மேனைத் திருமணம் செய்துகொண்ட சுயெல்லாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் 2வது சுற்றுவரை இருந்தவர் சுயெல்லாம் என்பது குறிப்பிடத்தக்கது.