இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல் எடின்பர்க் அரண்மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது!

Date:

பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடலை லண்டனுக்கு கொண்டு இறுதி ஊர்வலம் இன்று தொடங்கியது.

முதலில் அவரது உடல் ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் இருந்து வாகனம் மூலம் ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் உள்ள ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனைக்கு இன்று பிற்பகல் வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.

சுமார் 6 மணி நேரம் இந்த பயணம் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வழி நெடுகிலும் காத்திருக்கும் மக்கள் ராணியின் உடல் கொண்டு செல்லும் வாகனத்திற்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

நாளை மதியம் வரை ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனையில் உடல் வைக்கப்பட்டு பின்னர் செயின்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.

அங்கு ராணி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஸ்காட்லாந்து மக்களுக்கு அனுமதி வழங்கப்படும். அதன்பின் ராணி உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டி அரசு குடும்ப உறுப்பினர்கள் பெற்றுக் கொள்வார்கள்.

13ஆம் திகதி எலிசபெத் உடல், எடின்பர்க் விமான நிலையத்தில் இருந்து விமானப்படை விமானம் மூலம் எடுத்து செல்லப்பட்டு மாலை இங்கிலாந்தின் நார்த்டோல் விமான தளத்தை வந்தடையும்.

அங்கிருந்து சாலை மார்க்கமாக ராணி உடல் லண்டன் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அதன் பின் 14-ஆம் திகதி உள்ளூர் நேரப்படி மதியம் முதல் எலிசபெத் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் வைக்கப்படும்.

ராணி உடலுக்கு லண்டன் மக்கள் 4 நாட்கள் அஞ்சலி செலுத்தலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. அஞ்சலி நிகழ்ச்சிகள் முடிந்தபின் 19ஆம் திகதி காலை ராணியின் உடல் அடங்கிய பெட்டி ஊர்வலமாக வெஸ்ட் மின்ஸ்டர் அப்பேவுக்கு எடுத்து செல்லப்பட்டு, அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும்.

அதன்பின் வின்ட்சர் கோட்டைக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு ராணியின் கணவர் பிலிப் பின் கல்லறைக்கு அருகே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வாறு பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96) உடல் நலக்குறைவால் கடந்த 8ஆம் திகதி மரணம் அடைந்தார்.
அவர் ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் தங்கியிருந்த போது உயிர் பிரிந்தது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...