நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவும்.
காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோமீற்றர்களாக காணப்படும் எனவும், புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கசந்துறை வரையிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை, பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.