இராணுவத்தின் 73ஆவது ஆண்டு விழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
அதனை முன்னிட்டு இஸ்லாமிய சமய நிகழ்வு நேற்று (26) கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தலைமையில் ஆசி பெறும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் படைத் தளபதி, பிரதிப் படைத் தலைவர், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கனிஷ்ட அதிகாரிகள் மற்றும் படைப்பிரிவு சார்ஜன்ட் மேஜர்கள் மற்றும் ஏனைய அணிகள் கலந்துகொண்டனர்.
இராணுவக் கொடி, தொண்டர் படைக் கொடி உட்பட அனைத்து இராணுவப் படைப்பிரிவுகள், பாதுகாப்புப் படைத் தலைமையகம், பயிற்சி கல்லூரி பிரிவுகள், படைப்பிரிவுகள் மற்றும் அலகுக் கொடிகள் வழிபாடு செய்யப்பட்டு இராணுவத்தினருக்கு மத ஆசீர்வாதங்களும் இடம்பெற்றன.