நேற்று இடம்பெற்ற ஆசிய கிண்ண கோப்பை 2022 இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை இலங்கை தோற்கடித்ததால் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வீதிகளில் இறங்கி கொண்டாடினர்.
தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, ஆறாவது முறையாக ஆசியக்கிண்ணத்தை வென்றதையடுத்து, ஆப்கானிஸ்தான் வீரர்கள் நடனமாடி சிலர் கண்ணீரை வெளிப்படுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
புதன்கிழமை துபாய் ஷார்ஜாவில் நடந்த ஆசிய கோப்பை 2022 இன் சூப்பர் ஃபோர் கட்ட கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல்கள் இடம்பெற்றது.
2022 ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குழுநிலையில் இலங்கை மற்றும் வங்காளதேசத்தை வென்ற பிறகு அவர்கள் சூப்பர் ஃபோர் கட்டத்திற்கு தகுதி பெற்றனர்.
ஆனால் சூப்பர் ஃபோர் கட்டத்தில் எந்த வெற்றியையும் பெற முடியவில்லை, இலங்கை, பாகிஸ்தானிடம் தோற்றது.
அதன்படி ஆப்கானிஸ்தான் ஊடகவியலாளர் அப்துல்ஹக் ஒமேரி தனது டுவிட்டர் தளத்தில் பகிர்ந்த காணொளியில்,
இலங்கையின் வெற்றியின் பின்னர் சிலர் ஆரவாரத்துடன், சிலர் மகிழ்ச்சியுடன் நடனமாடியபடி, வீதியில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
இலங்கையின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கவும், குறிப்பாக பீல்டிங் செய்யும் போது, இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் செயல்திறனைப் பார்த்து கேலி செய்தும் மக்கள் சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் மற்றும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
171 ஒட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இலங்கை, பாகிஸ்தான் அணியை 20 ஓவர்களில் 147 ஓட்டங்களுக்கு வீழ்த்தியது.
#Afghans 🇦🇫 Celebrations in Capital #Kabul , #Afghanistan to celebrate Sri Lanka's victory over Pakistan in the #AsiaCup2022Final . pic.twitter.com/8ZnFkN5aKv
— Abdulhaq Omeri (@AbdulhaqOmeri) September 11, 2022