நாட்டின் அனைத்து இன சமூகங்களினதும் உரிமைகளை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்கு சமாந்தரமாக நடைபெறும் உயர்மட்ட சிறுபான்மை சமூக கூட்டமொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியல் அமைப்பின் பிரகாரம் சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படுகின்றதாகவும் இன சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்கான பேச்சுவார்த்தைகள் பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத குரோத செயற்பாடுகளை மேற்கொள்வோருக்கு எதிராக எவ்வித நெகிழ்வுத் தன்மையும் காட்டப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.