இலங்கையில் காட்டு யானைகளின் எண்ணிக்கை தற்போது 7000 ஆக அதிகரித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை இலங்கையில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 5600 என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் அண்மைய கணக்கீட்டின்படி, இந்நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 7000ஐ தாண்டியுள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் இலங்கையின் காடுகளில் தற்போது யானைகளின் எண்ணிக்கை 142 ஆக இருப்பதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னேரியா, கிரித்தலே மற்றும் பராக்கிரம சமுத்திரத்தில் சுற்றித்திரியும் சுமார் 350 காட்டு யானைகள் காணாமல் போயுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர வனஜீவராசிகள் திணைக்களத்திடம் கேட்டறிந்தார்.
மேலும் அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் இடம்பெற்ற சந்திப்பில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், மின்னேரியா, கிரித்தலே, பராக்கிரம சமுத்திரத்தை சூழவுள்ள காட்டுயானைகள் ஏனைய பிரதேசங்களுக்கு இடம்பெயர்வதால் காட்டு யானைகளினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.