றோஷன் ஸபீஹா என்ற பெண் தனது கலாநிதிக் கற்கையைத் தொடர்வதற்காக இன்று மலேசியவுக்குச் செல்கிறார்.
இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனம் கலாநிதிக் கற்கைக்காக வழங்கும் புலமைப் பரிசிலைப் பெற்று மலேசியாவின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய சிந்தனைக்கும் நாகரிகத்துக்குமான சர்வதேச நிறுவகத்தில் இஸ்லாமிய நாகரிகத் துறையில் இவர் தனது கலாநிதிக் கற்கையைத் தொடரவுள்ளார்.
இதன் மூலம் அவர் பிறந்த பிரதேசத்திலிருந்து முதலாவதாக கலாநிதிக் கற்கைக்குச் செல்லும் பெண் எனும் சிறப்பையும் அவர் பெறுகிறார்.
இவர் ஹொரவ்பொத்தானை கிவ்ளேகடையைச் சேர்ந்த நிஸார் ஆசிரியரின் சிரேஷ்ட புதல்வியாவார்.
கல்-எலிய முஸ்லிம் மகளிர் கல்லூரியில் கற்று பேராதனிய பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்திற்கு செரிவு செய்யப்பட்ட இவர் இஸ்லாமிய நாகரீகத்தை தனது சிறப்புத் துறையாகத் தெரிவு செய்து அதி விஷேட சித்தியுடன் அதனை நிறைவு செய்தார்.
பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் சில காலம் தற்காலிக விரிவுரையாளராப் பணி புரிந்தார்.
இக்காலப்பகுதியில் தனது முதுமானிப் பட்டத்தையும் பூர்த்தி செய்துவிட்டு இலங்கை ஆசிரிய சேவையில் இணைந்து கொண்டார்.
அவர் பயணிக்கும் நோக்கம் நிறைவேறுவதற்கும் அவரது சகல காரியங்களையும் வல்ல இறைவன் இலகுபடுத்திக் கொடுப்பதற்கும் உங்களது பிரார்த்தனைகளும் வலுச் சேர்க்கட்டும்.
முஸ்லிம் பெண் சமூகத்திலிருந்து இப்படியாக ஒரு துறைக்கு செல்லும் இந்த பெண் ஆளுமைக்கு எமது ‘நியுஸ் நவ்’ சார்பாக வாழ்த்துக்கள்.