உணவுப் பற்றாக்குறையால் 20 குழந்தைகள் மயங்கி விழுந்துள்ளனர்?: பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம்

Date:

அநுராதபுரம், விளாச்சியவில் உள்ள மூன்று பாடசாலைகளில் உணவின்றி பாடசாலைக்குச் சென்ற 20 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் நேற்று செப்டம்பர் 21 ஆம் திகதி மயங்கி விழுந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.பி.எஸ்.குமாரசிறி இன்று   பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேநேரம்., குழந்தைகளின் பசி குறித்தும் குமாரசிறி கடும் கவலை தெரிவித்தார்.

மினுவாங்கொடையில் உள்ள குழந்தையொன்று மதிய உணவிற்காக இளம் தேங்காய் துருவலை உணவாக உட்கொண்ட நிகழ்வும் ஊடகங்களில் இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் குமாரசிறி தெரிவித்துள்ளார்.

60 ரூபாவிற்கு ஒரு பாடசாலை மாணவருக்கு மதிய உணவு வழங்க முடியாது எனக் கூறி, நிலைமையை இப்போதே ஆராயுமாறு பாராளுமன்ற உறுப்பினர் கோரினார்.

இன்று காலை பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் தனது கவலைகள் குறித்து பேசினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, அநுராதபுரம்  சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும், அது தொடர்பில் மேலும் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

மினுவாங்கொடை சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரை தொடர்பு கொண்டதன் பின்னர் அவ்வாறான சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை என அதிபர் தமக்கு அறிவித்ததாக அமைச்சர் கூறினார்.

அவ்வாறானதொரு நிகழ்வு இடம்பெற்றால், அது குறித்து பயிற்றுவிப்பாளர்களுக்கும் மாணவர்களுக்கும் தெரியப்படுத்தப்படும் என அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

உண்மையை திரிபுபடுத்துவதற்கு எதிராக சுகாதார அமைச்சர் வலியுறுத்தினார், அதே நேரத்தில் உணவு வாங்க முடியாத குடும்பங்கள் குறித்து கவலைகள் உள்ளன என்பதை ஒப்புக்கொண்டார்.

ஊடகங்களும் சில அதிகாரிகளும் பல தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்களுக்கு தேவையற்ற விளம்பரங்களை வழங்கி பிரச்சினையை பொதுமைப்படுத்த முயற்சிப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...