உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் மற்றுமொரு நிகழ்ச்சி கேகாலை மாவட்டத்தில் உள்ள அரநாயக்க பிரதேச செயலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.
‘உதலு சவிய’ எனும் இந்த நிகழ்ச்சித் திட்டமானது அரநாயக்க பிரதேச செயலாளர் இசட்.ஏ.எம்.பைஃப்சல் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் எச்.கார்டன் ஆகியோரின் பூரண அனுசரணையுடன் இடம்பெற்றது.
மேலும், எஸ். நிஸ்ஸங்கவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அடையாளம் காணப்பட்ட மூன்று கிராம உத்தியோக பிரிவு குடும்பங்களைச் சேர்ந்த 60 பயனாளர்களுக்கு விதைகள் மற்றும் சேதனப்பசளை விநியோகிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் ரம்யா லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் டீ.எம். அலி சப்ரி, கேகாலை மாவட்ட சர்வமதக் குழு இணைப்பாளர் பந்துபால நாணயக்கார அப்பகுதி அரசாங்க அதிகாரிகள், கேகாலை மாவட்ட ரம்ய லங்கா இணைப்பாளர் வைத்தியர். எம்.ஐ.எம் அக்பர் அலி மற்றும் தேசிய சமாதான பேரவை உறுப்பினர்கள், ரம்ய லங்காவின் தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.