கடந்த 2021ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியாக முதலிடம் பெற்று மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஷ் சாதனை படைத்திருந்தார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் குறித்த மாணவரின் வீட்டிற்கு சென்று வாழ்த்தினார்.
இவ் வரலாற்று சாதனையை பெற்றமைக்காக நேரில் சென்று அவருக்கான நினைவுச்சின்னம் மற்றும் அன்பளிப்புகளையும் வழங்கி வைத்தார்.