நீதி அமைச்சரின் உத்தரவுக்கமைய கண்டி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்துக்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில் இன்று வெளியிடப்பட்டது.
இத்திருத்தமானது, 18 வயதிற்கும் குறைந்த ஒருவரின் திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதம் மற்றும் ஏற்கனவே உள்ள இணக்கமின்மைகளை நீக்குவதற்கு தேவையான கண்டிய திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தின் பிரிவு II ஐ நீக்குகிறது
மேலும், கண்டி திருமணச் சட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து நபர்களுக்கும் குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆக ஆக்கியுள்ளது.
இதற்கான சட்ட வரைவு ஆலோசகர் சட்டமூலமொன்றை தயாரித்திருந்ததுடன், சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளது.