கொழும்பு கேக் சென்டரின் 05 வருட பூர்த்தியை முன்னிட்டு, கண்காட்சி நிகழ்வும், ஆண்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அதற்கமைய இதன் பணிப்பாளர்களான எம்.ரபீக் மற்றும் நுஸ்ரா அஹ்மத் அவர்களின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதன்போது, கேக் பாடநெறியை பூர்த்தி செய்த மற்றும் ஒரு நாள் பாடநெறியில் கலந்து கொண்ட மாணவர்களின் பல வித்தியாசமான பல வகையான கேக் அலங்காரத்துடன் அண்மையில் கிருலப்பன பெஸ்ட் வெஸ்டேர்ன் எல்யொனில் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
குறித்த இந்நிகழ்வில், கௌரவ அதிதியாக எக்ஸ்போ லங்கா குழு நிறுவனத்தின் பிரதம கணக்காளர் எம்.என்.எம்.நஸீம், நடுவராக விருது பெற்ற கேக் அலங்கரிப்பாளர் புஷ்ப பௌசி, பிரதம அதிதியாக நடிகை திருமதி தினுஷா ஸ்ரீவர்தன,மற்றும் பெற்றோர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்து இக் கண்காட்சியினை கண்டுகளித்தனர்.
கேக் பாடநெறியில் கலந்து கொண்டு கேக் அலங்காரம் செய்யப்பட்ட 15 மாணவர்களுக்கும் புஷ்ப கௌஷி புள்ளிகளை வழங்கியதோடு இதில் திறமையாக செய்த மாணவர்களுக்கு நினைவுச்சின்னமும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
-சில்மியா யூசுப்