சவூதி அரேபியாவில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய தேசிய தின கொண்டாட்டங்கள்!

Date:

சவூதி அரேபியாவின் 92 ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு அந்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும்  வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய கொண்டாட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.

பொது பொழுதுபோக்கு ஆணையத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவர் துர்கி அல்-ஷேக், ‘இது எங்கள் வீடு’ என்ற கருப்பொருளின் கீழ் ஒன்பது நாள் அதாவது கடந்த செப்டெம்பர் 17 தொடக்கம் செப்டம்பர் 26 வரை நிகழ்வுகள் ஏற்பாடு செய்துள்ளது..

மற்றும் கடல்சார் நிகழ்ச்சிகள் கொண்டாட்டங்களின் முக்கிய சிறப்பம்சங்கள், போர் விமானங்கள், ஹெலிகொப்டர்கள், சிவில் விமானங்கள், கப்பல்கள் மற்றும் படகுகள் ஆகியவற்றின் முன்னிலையில் இந்த நிகழ்ச்சிகள் இராணுவ மற்றும் சிவில் துறைகளால் 34 நிகழ்வுகள் நிகழ்த்தப்படவுள்ளது.

இது தேசிய தின கொண்டாட்டங்களின் வரலாற்றில் மிகப்பெரிய வான் மற்றும் கடல் நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.

சவூதி போர் விமானங்கள், இராணுவம் மற்றும் சிவில் விமானங்கள் இராச்சியத்தின் வரலாற்றில் மிகப்பெரிய விமான கண்காட்சியில் பங்கேற்கும் ‘ஒரு தாயகம் வணக்கம்’ என்ற முழக்கத்தின் கீழ், இராச்சியம் முழுவதும் 13 முக்கிய நகரங்களில் நடைபெறும் 34 நிகழ்வுகள் இடம்பெறும்.

ரியாத், ஜித்தா, அல்-கோபர், தம்மாம் மற்றும் ஜுபைல் உட்பட சவூதியில் உள்ள அல்-அஹ்சா, தைஃப், தபூக் மற்றும் அபா ஆகிய நகரங்களிலும் தேசிய தின விமான நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அதுமட்டுமில்லாது நாடு முழுவதும் உள்ள 18 நகரங்களில் வானவேடிக்கை காட்சிகள் நடைபெறும் மற்றும் உள்ளூர் பூங்காக்கள் தேசிய தின நீண்ட வார இறுதியில் பொதுமக்களுக்கு திறந்திருக்கும்.

புதன்கிழமை முதல் ஞாயிறு வரை தேசிய தின கொண்டாட்டங்களுக்காக பாடசாலைகளும் நான்கு நாட்களுக்கு தேசிய தினத்தை முன்னிட்டு நீண்ட விடுமுறையை கொண்டாடுகின்றனர்.

Popular

More like this
Related

அரச உத்தியோகத்தர்களின் சம்பளமற்ற விடுமுறைகள் இடைநிறுத்தம்.

அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன்...

அனர்த்தங்களினால் பாதிப்புகளுக்குள்ளான சீரமைக்கப்படும் ரயில் மார்க்கம்

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளான மலைநாட்டு ரயில்...

நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு!

நீர்ப்பாசனத் திணைக்களத்தால் விசேட அறிவிப்பொன்று பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. நிலவும் அனர்த்த சூழ்நிலைகளைக் குறைக்க மற்றும்...

உலர் உணவுப் பொருட்களை வழங்கிய பிறீமா குழுமம்

பிறீமா குழுமம் (Prima Group Sri Lanka) ஆனது, அண்மையில் நாட்டில்...