இலங்கைக்கு 5,000 மெட்ரிக் தொன் அரிசியை சீனா வழங்கியுள்ளது. இந்த அரிசி இருப்பு உத்தியோகப் பூர்வமாக இலங்கை கல்வி அமைச்சில் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் சீனத் தூதுவர் சி சென்ஹோங் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
சீன மக்களின் நட்புறவின் மற்றுமொரு அடையாளமாக, இந்த உணவுத் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட பத்து இலட்சம் மாணவர்களுக்கு சீன அரசு அரிசி உதவி வழங்கப் போகிறது.
தெரிவு செய்யப்பட்ட 7,925 பாடசாலைகளில் அமுல்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டம் இலங்கையிலுள்ள மொத்த பாடசாலைகளில் 78வீத பாடசாலைகளை உள்ளடக்கும்.
#Chinese Ambassador Qi Zhenhong briefed #SriLankan Education Minister today:
1⃣ 5,000 Metric Tons 🇨🇳 aided rice are being distributed to 7,900 🇱🇰 schools.
2⃣ Another 5,000 MT rice will arrive in next 3 months.
3⃣ 70% of #lka 👧👦 school uniforms in 2023 will be gifted by #China. pic.twitter.com/qn1KbO8SjY— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) September 7, 2022