ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் கொலை வழக்கில் விடுதலைப்புலி உறுப்பினர் உள்ளிட்ட இருவர் விடுதலை!

Date:

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கம்பஹா முன்னாள் ஏ.எஸ்.பி லக்ஷ்மன் குரே மற்றும் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர் செல்வராஜா கிருபாகரன் என்ற மொரிஸ் ஆகியோரை கம்பஹா உயர்நீதிமன்றம் இன்று விடுதலை செய்து விடுதலை செய்தது.

குறித்த வழக்கு இன்று (செப்டம்பர் 1) எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி சஹான் மாபா பண்டார இந்த உத்தரவை வழங்கினார்.

2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் திகதி வெலிவேரிய கண்டி மைதானத்திற்கு அருகில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.

புலிகளின் முன்னாள் உறுப்பினர் செல்வராஜா கிருபாகரன் மற்றும் கம்பஹா முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் செனரத் லக்ஸ்மன் குரே ஆகியோருக்கு எதிராக கொலைச் சதி உள்ளிட்ட 31 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...