நடமாடும் ஆய்வுகூடங்களுடன் கூடிய 8 பஸ்கள் சீனாவினால் வழங்கிவைப்பு!

Date:

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கா பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய வதிகளைக் கொண்ட 8  நடமாடும் ஆய்வுகூட பஸ்கள் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.

அந்த வாகனங்கள் 660 மில்லியன் ரூபா பெறுமதியுடையவை என இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஸென்ஹொங் நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் இந்த நடமாடும் ஆய்வுகூட பஸ்களை உத்தியோகபூர்வமாக கையளித்தார். இந்தநிலையில் வாகனங்களின் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அநுராதபுரம், பொலன்னறுவை, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, குருநாகல், மாத்தளை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் நடமாடும் ஆய்வுகூடங்களுடன் கூடிய இந்த பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சிறுநீரக நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான திட்டத்தின் கீழ் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாளாந்தம் சுமார் 500 பேரை பரிசோதிக்க முடியும் என்பதுடன், மாவட்ட மட்டத்திலும் உள்ளூராட்சி மன்ற மட்டத்திலும் சிறுநீரக நோயாளர்களை அடையாளம் காண முடியும்.

இந்த நடமாடும் ஆய்வுகூட பஸ்களில் சீனாவினால் பயிற்சியளிக்கப்பட்ட இலங்கை சுகாதார ஊழியர்கள் பணிபுரிவதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...