நாவலப்பிட்டியில் இன்று நீர் விநியோகத் தடை!

Date:

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நாவலப்பிட்டி நீர் வழங்கல் திட்டத்தின் பிரதான நீர்க்குழாயில் திருத்த வேலைகள் காரணமாக இன்று 29 மு.ப. 8 மணி முதல் மறுநாள் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 8 மணி வரையிலான 24 மணிநேர நீர் விநியோகத்தடை பின்வரும் பகுதிகளில் அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

நாவலப்பிட்டி நகர எல்லை, பெளவாகம, மல்லந்த, இம்புல்பிட்டிய, ஹதுன்கலவத்த, தொலஸ்பாகே வீதி, பெனித்திமுல்ல உட்பட நாவலப்பிட்டி நீர் வழங்கல் திட்டத்தின் ஊடாக நீர் விநியோகிக்கப்படும் சகல பகுதிகள் நீர் விநியோத் தடையினால் பாதிக்கப்படும்.

இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவித்துள்ளது. இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...