பெருந்தோட்ட நிர்வாகங்களின் முறையற்ற செயற்பாடு: அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் வடிவேல் சுரேஷ் அவசர சந்திப்பு!

Date:

பெருந்தோட்ட நிர்வாகங்களின் முறையற்ற நிர்வாகம் தொடர்பான அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் அவசர சந்திப்பு இன்றைய தினம் பெருந்தோட்ட  கைத்தொழில் அமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மற்றும் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

பெருந்தோட்ட பகுதிகளில் JEDB  நிர்வாகத்தினால் பெருந்தோட்ட மலையக மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளை மீள பெற்றுக்கொள்ள நிர்வாகம் நடவடிக்கை எடுத்தமையினால் குடியிருந்த மக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது இவ்விடயம் தொடர்பில் இன்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சருக்கு சுட்டிக்காட்டியமைக்கு அமைய நிலைமையை சீர் செய்ய இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டது

மேலும் பெருந்தோட்ட முகாமைத்துவ கண்காணிப்பு பிரிவினால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தொடர்ந்தும் அநீதியை பெருந்தோட்ட தொழிலாளர்களின் வீடுகள் விஸ்தரித்தால் அல்லது மலசலகூடங்கள் அமைத்தாலோ உடனடியாக வழக்கு தொடரப்படுகின்றது.

இருப்பினும் பெருந்தோட்ட நிறுவனங்களினால் காடுகளாக மாற்றப்படும் காணிகளுக்கு எவ்விதமான எதிர்ப்பும் இல்லை இவ்விடயம் தொடர்பிலும் தொழில் அமைச்சில் கலந்துரையாடப்பட்டது.

இதனையடுத்து  தொடர்ந்தும் இத்தகைய செயற்பாடுகள் நடைபெறாது என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் உறுதியளித்தார்

மேலும் பெருந்தோட்ட நிர்வாகங்களின் அடாவடி செயற்பாடுகள் பெருந்தோட்ட மலையக மக்களின் உரிமைகள் தொழில் பாதுகாப்பு தொடர்பாகவும் வடிவேல் சுரேஷ் அவர்கள் அமைச்சருக்கு ஆணித்தனமாக எடுத்துரைத்தார்.

பெருந்தோட்ட நிர்வாகங்கள் இத்தகைய தன்னிச்சையான செயற்பாடுகளினால்பெருந்தோட்ட மலையக மக்கள் பாதிப்படைவதோடு பெருந்தோட்ட தொழிற் துறையும் பாரியதொரு வீழ்ச்சியை கண்டுள்ளது .

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...