‘பொருளாதார ரீதியாக இலங்கை மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்’: புத்தளத்தில் கருத்தரங்கு!

Date:

‘பொருளாதார ரீதியாக இலங்கை மக்கள் அண்மைக்கால நெருக்கடிகளால் எவ்வாறாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதனை அறிந்துகொள்ளும் பொருட்டு புத்தள மாவட்ட சர்வமத குழுவின் பங்களிப்பில் தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் இன்று புத்தளம் பாலாவியில் அமைந்துள்ள பிரதேச காரியாலயத்தில் கருத்தரங்கொன்று இடம்பெற்றது.

இக்கருத்தரங்கில் தேசிய சமாதான பேரவையின் முக்கியஸ்தரான சமன் செனவிரத்ன வளவாளராகக் கலந்துகொண்டு, இலங்கையில் எவ்வாறெல்லாம் தற்போது பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது? அதற்கான காரணங்கள் என்ன? குறிப்பாக இனவாதம் பொருளாதார வீழ்ச்சியின் பிரதான காரணியாக இருந்தமை உள்ளிட்ட விடயங்களோடு அதிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் மீட்டெடுப்பதற்கு நடைமுறை சாத்தியமான வழிமுறைகள் என்ன என்பது பற்றிய விளக்கங்களுடன் அமைந்த பயிற்சிகளும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

இதேவேளை கொவிட் காலத்திற்கு பிறகு இலங்கையில் பொருளாதாரத்தின் கீழ் மட்டத்திற்கு சென்றுள்ள நிலைமைகள், புத்தள மாவட்ட மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் போன்ற விடயங்களும் பிரதேசத்தில் உள்ள வாய்ப்புக்கள், வளங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

இக்கருத்தரங்கில் மாவட்ட சர்வமத முக்கியஸ்தர்கள் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சமாதானப் பேரவையின் ரஸிகா செனவிரத்ன, DIRC யின் முஸ்னியா ஆகியோர் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...