மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிக்க ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பொறிமுறையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், எதிர்வரும் ஜெனீவா ஐநா மனித உரிமை அமர்வுகளுக்கு இலங்கை தூதுக்குழுவை அனுப்புவதை எவ்வாறு நியாயப்படுத்தலாம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டதரணி எம். எம். சுஹைர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இலங்கiயில் 2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து விசாரனைகளை நடத்த வெளிநாட்டு துப்புத்துளக்கும் நிறுவனங்களை இலங்கை அனுமதித்ததன் பின்னணியில் அமைச்சர் சப்ரியின் நிலைப்பாடு கேள்விக்குறியது என சுஹைர் குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியின் கீழ் தெஹ்ரானுக்கான தூதுவராகவும் கடமை புறிந்த சுஹெய்ர் மேலும் கருத்துக் கூறுகையில்,
மோசமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவை சமாளிக்க வெளிநாடுகளின் உதவியை அதிகளவில் இலங்கை நம்பியிருக்கும் இது போன்றதொரு தருணத்தி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கூறப்படும் மனித உரிமை தொடர்பான குற்றச்சாட்டுக்களை நமது அரசாங்கம் ஆக்கப்பூர்வமாக அனுகுவது அவசியம் எனவும் கூறினார்.
கடந்த திங்கட்கிழமை கொழும்பில் ஊடகங்களுக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கருத்துத் தெரிவித்த போது போர் குற்றங்களுக்கான ஆதாரங்களை சேகரிக்க வெளிநாட்டு குற்ற ஆய்வு அமைப்புக்களை இலங்கைக்குள் அனுமதித்தல், இலங்கை பிரஜைகளுக்கு வெளி நாடுகளில் குற்றம் சுமத்துதல், கலப்பு நீதிபதிகளை வரவழைத்தல் போன்ற நடவடிக்மைகககளுக்கு இலங்கை அரசாங்கம் உடன்படாது எனவும் இவை அரசியலமைப்பிற்கு எதிரானவை என்றும் கூறியிருந்தார்.
‘இலங்கைப் பிரஜைகள் மீது வெளிநாடுகளில் குற்றம் சுமத்தல், வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கையில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க இடம் கொடுத்தல் போன்றவற்றிக்கு அலி சப்ரி எதிர்ப்பு தெரிவிப்பது நியாயமானதுதான் என நானும் ஏற்றுக் கொள்கின்றேன்.
ஆனால் இலங்கையின் நீதிபதிகளின் ஒப்புதல் இன்றி 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிப்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதி அளித்த பின்னணியில், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரிக்க ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பொறிமுறைக்கு எவ்வாறு அரசாங்கம் அனுமதி மறுக்கலாம் என்ற கேள்வி எழுகின்றது’ என திரு சுஹெயிர் சுட்டிக்காட்டினார்.
‘எவ்வித சம்பந்தமும் இல்லாத வெளிநாட்டு புலனாய்வாளர்களை உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புகள் நடந்த இடங்களுக்குச் செல்லவோ, இலங்கை புலனாய்வாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கவோ அல்லது புலனாய்வுக் குழுவில் அங்கம் வகிக்கவோ இலங்கையில் எந்தவொரு நீதவானாலும் அப்போது அதிகாரம் வழங்கப்படவில்லை என்பதை நிச்சயமாக றன்மதிப்பிற்குரிய ஒரு சட்டத்தரணி என்ற வகையில், அமைச்சர் அலி சப்ரி அறிந்திருக்க வேண்டும்.
அந்த சமயத்தில், ஈஸ்டர் தாக்குதல்கள் பற்றி விசாரிப்பதற்காக வெளிநாட்டு விசாரணைப் பொறிமுறைகளை நாட்டிற்குள் அனுமதிப்பவர்கள் அதன் மூலம் பிற்காலத்தில் இலங்கயில் நடைபெறும் குற்றச் செயல்களை விசாரிப்பதற்கு வெளிநாட்டு நீதிபதிகள் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான அடித்தளத்தை இடுகின்றார்கள் என் நான் ஊடக அறிக்கைகள் மூலம் பகிரங்கமாகவே எச்சரித்து வந்தேன்’ என்றும் சுஹெயிர் ஞாபகப்படுத்தினார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, அமெரிக்க சமஷ்டிப் புலனாய்வுப் பிரிவு (FBI) மற்றும் ஆஸ்திரேலிய பெடரல் போலீஸ் (AFP) ஆகியவை இலங்கை குற்றப்புளாய்வுத் திணைக்களத்துடன் இணைந்து ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை நடத்தி வருவதாக அப்போதைய பொது பாதுகாப்பு அமைச்சர் 19 மே 2021 அன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க சமஷ்டிப் புலனாய்வுப் பணியகம் (CIA) மத்திய புலனாய்வு முகவர் அமைப்பு போன்ற ஊதியத்திற்கு பணியாற்றும் ‘எஜமான் விசுவாசமிக்க’ அமெரிக்க நிறுவனங்களும், ஐ.நா மனித உரிமை ஆணையமும் நிலைப்பாட்டால் பாரிய வித்தியாசம் உள்ள நிறுவனங்களாகும்.
கடந்த சுமார் 40 ஆண்டு காலமாக அமெரிக்க அரசின் பூலோக அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்காக அந்நாட்டின் CIA மற்றும் FBI போன்ற நிறுவனங்கள் அப்பட்டமான பொய்களை கூறியவண்ணம் ஈராக், லிபியா, சிரியா போன்ற மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் கியுபா போன்ற பிராந்திய நாடுகளிலும் செயற்பட்ட சட்ட விரோத மற்றும் நியாயமற்ற விதங்கள் பற்றி உலகறியும்.
ஆனால் ஐ.நா மனித உரிமை ஆணையம் அவ்வாறான பக்க சார்புள்ள நிறுவனம் அல்ல எனவும் சுஹெயிர் சுட்டிக்காட்டினார்.
இது நாம் நாடு சர்வதேச நாணய நிதித்தின் உதவியை எதிர் நோக்கியிருக்கும் ஒரு முக்கிய தருணமாகும்.
அமைச்சர்கள் அலி சப்ரி மற்றும் விஜயதாச ராஜபக்ஷ இருவரும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாம் சுமுகமதாக பெறும் வித்திலானதொரு விவேக மிகு அனுகுமுறையை ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் கையாள்வார்களா? இதையே பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள 22 மில்லியன் இலங்கையர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.