நாட்டில் நிலவும் குழந்தைகளுக்கான போசாக்கின்மை நிலைமை தொடர்பான விவாதத்தின் போது பதில் வழங்குவதற்கு பொறுப்பான அமைச்சர்கள் எவரும் இன்று பிற்பகல் பாராளுமன்ற அலுவகத்தில் தங்கியிருக்கவில்லை என்பது விசேட அம்சமாகும்
சபை ஒத்திவைக்கப்பட்டபோது நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு குறித்த விவாதம் தொடர்ந்தது.
இந்த விவாதத்திற்கான பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன முன்வைத்தார்.
நாட்டில் நிலவும் போசாக்கின்மை நிலைமை தொடர்பில் விவாதத்தை நடத்துவதற்கு பொறுப்பான அமைச்சர் இல்லை என்பது வேதனையான விடயம் என விவாதத்தின் இறுதியில் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார்.
இந்த விவாதத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட எம்.பிக்கள் பேசினர்.
போசாக்குக் குறைபாட்டின் அடிப்படையில் இலங்கை உலகில் 6ஆவது இடத்தில் உள்ளதாக யுனிசெப் தனது அறிக்கையில் வெளிப்படுத்தியிருந்தது. யுனிசெப் வெளியிட்ட உண்மைகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த விவாதத்தை கோரியிருந்தது.