போதையை தடுக்க பாடசாலை மாணவர்களின் பைகள் பரிசோதிக்கப்படும்: சுசில்

Date:

ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களில் இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்றும் நடவடிக்கையாக பாடசாலை மாணவர்களின் பைகள் பரிசோதிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்த  சுசில் பிரேமஜயந்த, நாட்டுக்குள் ஹெரோயின் கொண்டுவந்து பிடிபடும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதனை மிக நுணுக்கமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகம் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும்  சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஐஸ் போதைப் பொருட்களை கொண்டு செல்வது மிகவும் இலகுவானது எனவும், அவற்றை தடுப்பதற்கு எந்த சட்டமும் இல்லை எனவும் எமது ஜன பல கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...