இலங்கை பாராளுமன்றத்தின் உறுப்பினராக அமைச்சராக நீண்ட காலம் பணிபுரிந்தவரும், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மொழி பெயர்ப்பாளரும் இலங்கை முஸ்லிம் வரலாற்றில் ‘வாழ்வோரை வாழ்த்துவோம்’ என்ற நிகழ்ச்சித்திட்டத்தின முன்னோடியுமான மர்ஹும் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் மறைந்து 5 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது.
இதனை முன்னிட்டு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தினால் நேற்று 31 ஆம் திகதி அன்னாரின் நினைவுப் பேருரை நிகழ்ச்சி முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் சுஹைர் முகமது ஹம்தல்லாஹ் செய்த் கலந்துகொண்டார்.
கௌரவ அதிதிகளாக கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர், அல்ஹாஜ் எம்.டி.எம்.இக்பால் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
நினைவுப் பேருரையை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க வழங்கினார்.
இதேவேளை மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வரின் நினைவாக தேவையுடைய சில மாணவர்களுக்கு புலைமைப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.