முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல் கூட்டணி அமைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அந்த கூட்டணியின் பிரதான கட்சியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயற்படும் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
தெடிகம பகுதியில் நேற்று அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் ராஜபக்ச இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
அதனை நிர்மாணிப்பதற்காக ஏற்கனவே அரசியல் குழுக்களுடன் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கலந்துரையாடல்கள் வெற்றிகரமான மட்டத்தில் உள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் அதிகார தளம் வீழ்ச்சியடையாமல் பாதுகாப்பதற்கும், எதிர்வரும் தேர்தலை பலத்துடன் எதிர்கொள்வதற்கும் பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்
நிறைவேற்ற முடியாத மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவதற்காக தமது கட்சியினால் ஆரம்பிக்கப்படும் இந்த புதிய கூட்டணியின் ஊடாக நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு பொதுஜன பெரமுன தலைமைத்துவத்தை வழங்கும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.