ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் நினைவு அஞ்சலி டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன.
அதன் பாதுகாப்பிற்காக சுமார் 20,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட சுமார் 50 மாநில தலைவர்கள் ஷின்சோ அபேக்கு இறுதி அஞ்சலி செலுத்தவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஜூலை மாதம் தீவிரவாதி ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஷின்சோ அபேக்கு வயது 67. ஷின்சோ அபே ஜப்பானின் பிரதமராக நீண்ட காலம் பதவி வகித்தவர்.
700க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்பட 4,300க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். டோக்கியோவின் மையப் பகுதியில் உள்ள புடோகன் என்ற இடத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.