2022 FIFA உலகக் கோப்பையின் போது தற்காலிக கொன்சியூலர் காரியாலயத்தை அமைக்க இஸ்ரேலின் கோரிக்கையை கத்தார் நிராகரித்துள்ளது.
உலகக் கோப்பையில் இஸ்ரேல் குடிமக்கள் கலந்து கொள்வதற்கு வசதியாக,இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பையில் கலந்துகொள்ள தோஹாவில் தற்காலிக கொன்சியூலர் காரியாலயத்தை திறக்க வேண்டும் என்ற இஸ்ரேலின் கோரிக்கையை கத்தார் அரசு நிராகரித்துள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்களுக்கான பிரதிநிதி அலுவலகம் தொடர்பாக இஸ்ரேலும் கத்தாரும் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் கடந்த வாரம் செய்தி வெளியிட்டன.
கொன்சியூலர் காரியாலயம் தொடர்பாக இஸ்ரேலுக்கும் கத்தாருக்கும் இடையே நேரடித் தொடர்பு இல்லை என்ற செய்திகளை மறுத்துள்ளது.
அதற்கு பதிலாக இஸ்ரேலியர்கள் FIFA உடன் இந்த பிரச்சினையை விவாதித்ததாகவும் ஆனால் டோஹா கோரிக்கையை நிராகரித்ததாகவும் கத்தார் தலைநகர் வட்டாரங்கள் தெரிவித்தன.
உலகக் கோப்பையின் போது டோஹாவில் தற்காலிக கொன்சியூலர் காரியாலயத்தை திறப்பதற்காக இஸ்ரேல் மற்றும் கத்தாருக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் சமீபத்திய நாட்களில் செய்தி வெளியிட்டு வருகின்றன.
டோஹாவில் உள்ள ஆதாரங்கள் இதை மறுத்தன. இந்த கோரிக்கை FIFA வழியாக அனுப்பப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியது, ஆனால் டோஹா அதை நிராகரித்ததுள்ளது.
இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகமும் அத்தகைய பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று டோஹா நியூஸ் தெரிவித்துள்ளது.