22ஆவது திருத்தத்தின் சில சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானவை; உயர் நீதிமன்றம்

Date:

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்தின் சில விதிகள் அரசியலமைப்புக்கு முரணானவை என  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபையில் அறிவித்தார்.

சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதே சபாநாயகர் இதனை அறிவித்தார்.

இதன்படி, அரசியலமைப்பு திருத்த வரைவை விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றி, சர்வஜன வாக்கெடுப்பு அல்லது சம்பந்தப்பட்ட சரத்துக்கள் திருத்தப்பட வேண்டும் என்ற முடிவுக்கு உச்ச நீதிமன்றம் வந்துள்ளது.

அரசியலமைப்பின் 22 வது திருத்தத்தின் வரைவு அரசியலமைப்பின் 120 (1) (1) இன் படி உச்சநீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்ததன் பின்னர், மனுக்களின் விசாரணையை நிறைவு செய்த குழாம், தனது முடிவுகளை சபாநாயகருக்கு சமர்பிப்பதாக கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி  அறிவித்தது.

Popular

More like this
Related

பெண்ணியம் பேசிய அதிகாரியின் மறுபக்கம்: ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் சிக்கிய ஐக்கிய அரபு அமீரக அதிகாரி ஹிந்த் அல் ஒவைஸ்.

சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein)...

வழமைக்கு திரும்பிய குடிவரவு, குடியகல்வு திணைக்கள தரவுக் கட்டமைப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவு கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு...

மூத்த அரசியல்வாதி பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்!

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமாகியுள்ளார் சிறிது...

பங்களாதேஷில் ஆட்சியைக் கைப்பற்றியது கலீதா ஜியாவின் பி.என்.பி. கட்சி: பிரதமராகும் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷின் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலில் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன்...