சமகால உலக ஆதிக்க அரசியல் கூட்டாளிகளின் அதிகார விளையாட்டுக்கான பிரதான ஆடுகளமாகவும் இது இருந்து வருவதால் இதனை எளிதில் நாம் புறக்கணிக்க முடியாது.
உலக வல்லாதிக்க சக்திகளில் மிகப் பலமான புலனாய்வுக் கட்டமைப்பைக் கொண்ட அமெரிக்க தேசத்தின் மத்திய புலனாய்வு மையத்தினால் ( Central intelligence Agency) தமது தேசிய எல்லைக்குள் நடக்கப்போகும் தாக்குதல் குறித்து முன்னுணர முடியாது போனதேன்? ஒரு தாக்குதல் நடந்து 4 மணித்தியால இடைவெளிக்குப் பின்னர்தான் அடுத்த தாக்குதல் நடந்தது. அதனையேனும் முன்னுணர முடியவில்லை என்பதை நம்ப முடியுமா?
உலகின் பட்டி தொட்டி எங்கும் மோந்து திரிகின்ற, கண்டம் விட்டு கண்டம் தாவி மோப்பம் பிடிக்கின்ற CIA ற்கு துலங்காத முன்னறிவு எட்டாயிரம் அமெரிக்க யூதர்களுக்கு துலங்கியதெப்படி? தாக்குதல்கள் நடந்து இரண்டு மணி நேரத்தில் ஒவல் அலுவலகத்திற்கு வெளியே இருந்த ஜோஜ் புஷ்ஷை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் என்ற யூதர் “This is the second pearl harbor attack we must utilize it for our interests ” என்றதன் அர்த்தம் என்ன? தாக்குதல் நடந்து அரை மணி நேரம் முடிவதற்குள் முஸ்லிம்கள் இந்தத்தாக்குதல் குறித்து தமது மகிழ்ச்சி ஆரவாரத்தை தெரிவிப்பது போன்ற ஒரு காட்சியை CNN ஒளிபரப்பியதேன்? சூத்திரதாரிகளை அரைமணி நேரத்தில் CNN இனால் எப்படி கண்டுபிடிக்க முடிந்தது? அந்த சம்பவம் நடப்பதற்கு சில பத்தாண்டுகளுக்கு முன்னர் ஜோர்தான் தலை நகர் அம்மானில் பலஸ்தின அகதிகள் ஊர்வலம் செல்லும் காட்சி அது.
அதை ஹெடோக் என்ற ஒரு யூதனின் தனிச்சொத்தான CNN உடனடியாக ஒளிபரப்பி உலகத்தின் காதுகளுக்கு உரக்கச் சொன்ன செய்தி என்ன? துருக்கிய ஆய்வாளர் அவ்ரஹான் முஹம்மது அலி சொல்வதுபோல் இந்த மர்மமான கேள்விகள் மறைத்து வைத்திருக்கும் ஓர் அரசியல் பேருண்மை உள்ளது.
உலகை குறிப்பாக குறைந்த விலையில் எண்ணெயைக் கொள்ளையிட்டு வந்த அறபுலகை தொடர்ந்தும் வேட்டைக்காடாக வைத்திருக்க வேண்டும் எனில் வொஷிங்டனுக்கு ஒரு புதிய எதிரியைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.
பயங்கரவாதம் தீவிரவாதம் வன்முறை என்பவற்றை முஸ்லிம்களுடன் மட்டும் முடிச்சுப் போட்டுவிட்டால் தொடர்ந்தும் உலகாதிக்கத்தை இருபத்தோராம் நூற்றாண்டிலும் தம் வசம் வளைத்துப் போடலாம் என்ற சமன்பாட்டில் ஒரு கூறுதான் இஸ்லாம் என்ற புதிய எதிரி.
சமகால உலக புவி அரசியலில் இந்த தாக்குதல் இன்று வரை அதனது விகாரமான தலையை நீட்டிக் கொண்டே இருக்கிறது. 4/21 உம் அதன் பூகோளத் தொடர்ச்சி தான். இந்தத்தாக்குதலை அடுத்து புஷ்ஷும் பிளேயரும் ஆப்கானை வேட்டையாடினர்.
தோறா போறா மலை இடுக்குகளில் தான் இந்தத்தாக்குதலை நடாத்திய பயங்கரவாதிகள் ஓழிந்திருப்பதாக அவர்கள் கதை அளந்தனர். பிரதான சூத்திரதாரி உஸாமா என்றனர்.
அப்பாவி ஆப்கான் மக்கள் செல் வீச்சுகளில் சிதறிப்போயினர். காபூல் ஊடாக பக்தாதுக்கான பாதை தயாராகிறது.
பத்து இலட்சம் ஈராக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஈராக்கிய விஞ்ஞானிகளை பல்கலை வளாகத்தில் மாணவர்கள் முன்னால் அமரிக்க இராணுவம் கொன்று குவித்தது.
பின்னர் ஈராக்கை சுன்னிகள் ஷீயாக்கள் குர்திஸ்களுககென துண்டு போட்டது வொஷிங்டன்.
வளமான எண்ணெய் வயல்களில் 90 விழுக்காட்டைக் கொணட வடக்கு ஈராக் குர்திஷ்களுக்கு தாரை வார்க்கப்பட்டது. இன்று அங்கே இஸ்ரேலும்அமெரிக்காவும் மேய்ந்து வருகின்றன.
இதன் உண்மையான குற்றவாளிகள் இன்னும் வெளியே சுதந்திரமாகச் சுற்றி திரிகிறார்கள் என்பதுதான் வாய்பபுக்கேடானது. ஒருவர் முட்டாள் என்று பட்டம் வாங்கி ஈராக்கில் செருப்பால் எறியப்பட்ட டிஜிடல் ஷைத்தான் ஜூனியர் புஷ்.
மற்றையவன் பிரிட்டிஷ் முன்னாள் மொக்கன் பிளேயர். இரண்டு பேரையும் தூக்கிலிடுவதுதான் அன்றைய தினம் இறந்தவர்களுக்கான செஞ்சோற்றுக் கடனாய் இருக்கும்.