SLFPயின் 71 வது வருட பூர்த்தி இன்று!

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 71 வது வருட பூர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி மறைந்த பிரதமர் எஸ்.டபிள்யு ஆர்.டி பண்டாரநாயக்கவின் தலைமையில் கொழும்பு நகர மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இன்றைய வருட பூர்த்தி நிகழ்வுகள் மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ள இந்த வருட பூர்த்தி நிகழ்வின் போது, கட்சியின் யாப்பு திருத்தப்படவுள்ளது.

இதற்காக இன்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அகில இலங்கை மத்திய செயற்குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மத்திய செயற்குழுவில் அனுமதி கிடைக்கப்பெற்ற கட்சியின் யாப்பு திருத்த யோசனை அந்த செயற்குழுவின் அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளது.

தற்போது நான்காகவுள்ள சிரேஷ்ட உப தவிசாளர்களின் எண்ணிக்கையை 7 ஆக அதிகரிக்கவும், 10 ஆகவுள்ள உப தவிசாளர்களின் எண்ணிக்கையை 14 ஆக அதிகரிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் புதிய திருத்தம் ஊடாக சிரேஷ்ட உப தவிசாளர்கள், உப தவிசாளர்கள், தேசிய அமைப்பாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்டோரை பதவி விலக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவருக்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்டிருந்ததாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Popular

More like this
Related

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் மீண்டும் கட்டணம் அறவிடப்படும்

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (டிசம்பர் 4) முதல் மீண்டும் கட்டணம் அறவிட...

சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து ஆராய்வு

அனர்த்த நிலைமை காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து...

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்: சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் கைகோர்ப்பு

டிட்வா சூறாவளிக்குப் பின்னர் நிலைமையை மதிப்பிடுவதற்கும் நிவாரணம், மீட்புப் பணிகள் மற்றும்...

டித்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சவூதி அரேபிய தூதரகம் இரங்கல்

'டித்வா' சூறாவளி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு...