1951 ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் இயங்கி வருகின்ற அஹதிய்யா மத்திய சம்மேளனத்திற்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கும் இடையில் அஹதிய்யா பாடசாலைகளின் பணிகளை காலத்திற்கு ஏற்ற விதத்தில் மறுசீரமைப்பது, தரப்படுத்துவது தொடர்பாக பல சந்திப்புகள் இடம் பெற்றன.
அதன் விளைவாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் அஹதிய்யா மத்திய சம்மேளனமும் இணைந்து செயற்படுவதற்கான பொறிமுறை ஒன்றை வகுக்கவும் அஹதிய்யா பாடசாலைகள் வினைத்திறன் மிக்கதாக இயங்குவதற்காகவும் நிறைவேற்றுக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது.
இக்குழுவில் மொத்தம் 27 பேர் அங்கம் வகிக்கின்றனர். திணைக்களத்தின் சார்பாக பணிப்பாளர், உதவிப் பணிப்பாளர்கள் உற்பட 10 உறுப்பினர்களும் அஹதிய்யா மத்திய சம்மேளனம் சார்பாக தலைவர், செயலாளர் உற்பட 10 உறுப்பினர்களும் மேலும் துறைசார் நிபுணர்கள் 07 உறுப்பினர்களும் அடங்குகின்றனர்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரது ஆலோசனை, வழிகாட்டலின் கீழ் உருவாக்கப்பட்ட மேற்படி குழுவின் அங்குரார்ப்பண நிகழ்வு 2022.09.16 ஆம் திகதி மு.ப 10.00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை திணைக்கள கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. மேற்படி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.
திணைக்களம் சார்பாக:
1. இப்ராஹிம் அன்சார் (பணிப்பாளர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்)
2. M.L.M. அன்வர் அலி (உதவிப் பணிப்பாளர்)
3. M.S.M. அலா அஹ்மத் (உதவிப் பணிப்பாளர்)
4. அஷ்ஷெய்க் A.M. ரிஸ்மி (அபிவிருத்தி உத்தியோகத்தர்)
5. அஷ்ஷெய்க் M.I.M. முனீர் (அபிவிருத்தி உத்தியோகத்தர்)
6. அஷ்ஷெய்க் M.M.M. முப்தி (அபிவிருத்தி உத்தியோகத்தர்)
7. அஷ்ஷெய்க் A.M. ஆரிஸ் (அபிவிருத்தி உத்தியோகத்தர்)
8. அஷ்ஷெய்க் M.T.M. இல்ஹாம் (அபிவிருத்தி உத்தியோகத்தர்)
9. அஷ்ஷெய்க் A.H. சியாம் மொஹமட் (அபிவிருத்தி உத்தியோகத்தர்)
10. அஷ்ஷேய்க் M.I கியாஸ் (அபிவிருத்தி உத்தியோகத்தர்)
துறைசார் நிபுணர்கள்:
1. கலாநிதி A.M. ஜஸீல்
2. கலாநிதி அஸ்வர் அஸாஹீம்
3. அஷ்ஷெய்க் S.H.M.பழீல்
4. அஷ்ஷெய்க் M.Z.M. முஸ்தபா ராஸா
5. அஷ்ஷெய்க் ரஸீன் அஸான்
6. அஷ்ஷெய்க் M.N.M. இஜ்லான்
7. அஷ்ஷெய்க் M.H.M.புகாரி
அஹதிய்யா மத்திய சம்மேளனம் சார்பாக:
1. அல்ஹாஜ் M.R.M.சரூக்
2. ஜனாப் M F.M.பாஹீம்
3. அல்ஹாஜ் M.H.M.உவைன்
4. அஷ்ஷெய்க் M.F. முஹம்மத்
5. சட்டத்தரணி M.அஷ்ரப் ரூமி
6. அஷ்ஷெய்க் அக்ரம் ஜுனைட்
7. அஷ்ஷெய்க் U.L ரபாய்தீன்
8. ஜனாப் A.L.M.அஸ்வர்
9. ஜனாப் M.F.பதீன்
10. ஜனாப் S.M.ஹிஸாம்
குறித்த நிறைவேற்றுக் குழு எதிர்காலங்களில் அஹதிய்யா மறுசீரமைப்பு செயற்பாடுகளை திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் வினைத்திறன் மிக்கதாக செயற்படுத்துவதற்கான திட்டமிடல்களை மேற்கொள்ளும்.