ஆரம்ப பிரிவில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு!

Date:

அனைத்து அரசுப் பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவாக சம அளவிலான அரிசியை வழங்க விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் வழங்கப்பட்ட 27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த மதிய உணவில் பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்க போலிக் அமிலம், இரும்புச்சத்து மற்றும் விற்றமின்கள் அடங்கியதாக திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் உணவுப் பற்றாக்குறை என்பன பாடசாலை மாணவர்களின் போசாக்கு விடயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே ஆரம்பப் பிரிவுகளில் உள்ள பிள்ளைகளின் போஷாக்கை உறுதிப்படுத்தும் வகையில் உணவு வழங்கப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Popular

More like this
Related

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...