இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

Date:

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தளம்பல் நிலை தொடர்ந்தும் காணப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று சுமார் 12.10 மணியளவில் கற்பிட்டி, துனுபொத்தகம, ஊட்டிமடுவ, நிகவெவ,வெல்லான்குளம் மற்றும் வெருகல் போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது.
கடல் : கொழும்பு தொடக்கம் புத்தளம், மன்னார், திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 km வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.
கொழும்பு தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 ‐ 55 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

Popular

More like this
Related

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் மீண்டும் கட்டணம் அறவிடப்படும்

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (டிசம்பர் 4) முதல் மீண்டும் கட்டணம் அறவிட...

சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து ஆராய்வு

அனர்த்த நிலைமை காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து...

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்: சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் கைகோர்ப்பு

டிட்வா சூறாவளிக்குப் பின்னர் நிலைமையை மதிப்பிடுவதற்கும் நிவாரணம், மீட்புப் பணிகள் மற்றும்...

டித்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சவூதி அரேபிய தூதரகம் இரங்கல்

'டித்வா' சூறாவளி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு...