இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

Date:

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடல் : கொழும்பு தொடக்கம் காலி வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை, முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 ‐ 55 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக் காணப்படும்.

Popular

More like this
Related

20 மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் பல...

சுரேஷ் சாலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஒத்துழைப்பு: சிரியா சென்றடைந்தார் உக்ரைன் ஜனாதிபதி.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான்...

புத்தாண்டு காலத்தில் இணையவழி மோசடி: பொலிஸார் எச்சரிக்கை

இணையவழி பணப்பரிமாற்றங்களின் போது பொதுமக்களை ஏமாற்றி முன்னெடுக்கப்படும் நிதி மோசடி குறித்து...