உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள்..!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2018 இல் நடத்தப்பட்டு 2022 இல் முடிவடையத் திட்டமிடப்பட்டது, ஆனால் அமைச்சரின் அதிகாரத்தின் கீழ் அவை 2023 வரை நீட்டிக்கப்பட்டது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களுக்கு செப்டம்பர் 20ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்த முடியும் என சட்டத்தரணி புஞ்சிஹேவா தெரிவித்தார்.

ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வாக்காளர் பட்டியல்கள் சான்றளிக்கப்படவுள்ளதால், உள்ளூராட்சித் தேர்தலை பின்னர் நடத்துவது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த முறை உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்காக 5 பில்லியன் ரூபா செலவிடப்பட்ட நிலையில், இம்முறை அந்த தொகை எட்டு முதல் பத்து மில்லியன் வரை இருக்கும் என நம்பப்படுகிறது.

Popular

More like this
Related

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...