எதிர்வரும் முதலாம் திகதி முதல் பெரும்போகத்திற்கான உர விநியோகம்!

Date:

பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரம், எதிர்வரும் முதலாம் திகதி முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்திய கடன் உதவியின் கீழ் சிறுபோகத்திற்கு கிடைத்த யூரியா உரத்தில் எஞ்சிய கையிருப்பை பெரும்போக செய்கைக்காக விநியோகிக்கவுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் E.H.M.L.அபேரத்ன குறிப்பிட்டார்.

முதல் கட்டமாக ஒரு ஹெக்டேயர் நெற்செய்கைக்காக 20 கிலோ கிராம் யூரியா உரம் வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, குருணாகல் ஆகிய மாவட்டங்களிலுள்ள விவசாயிகளுக்கே யூரியா உரத்தை முதலில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் E.H.M.L.அபேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

ரயில் பயணத்தைத் தவிர்க்குமாறு ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஈரானியர்கள் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி வரை ரயில்களில் பயணம்...

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் கைது

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கோன்கஹாகே மற்றும் முன்னாள்...

இலங்கையின் பல பகுதிகளில் சூரியன் உச்சம்

சூரியனின் வடதிசை நோக்கிய நகர்விற்கு அமைவாக, ஏப்ரல் 05 முதல் 15 ஆம்...

புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத் தொகுப்பைச் சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,...