ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம்: வாக்கெடுப்பு ஒக்டோபர் 6

Date:

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் முக்கிய நாடுகளின் தீர்மானம் ஒக்டோபர் 6ஆம் திகதி வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், தீர்மானங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் நாளை (28) ஆகும்.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜேர்மனி, வடக்கு மாசிடோனியா, மொன்டனீக்ரோ மற்றும் போன்ற நாடுகளை உள்ளடக்கிய  நாடுகளால் இலங்கை தொடர்பான தீர்மானம் இணை அனுசரணை வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய விடயமாக, நல்லிணக்கம் மற்றும் அதன் அனைத்து மக்களும் மனித உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதில் உள்ளடங்கிய அரசியல் அதிகாரப் பகிர்வு தொடர்பான தனது கடப்பாடுகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திடம் தீர்மானம் கோரியதுடன், அரசாங்கத்தை மதிக்க ஊக்குவித்துள்ளது.

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதன் ஊடாக உள்ளூராட்சி அதிகார சபைகள், இலங்கையின் அரசியலமைப்பின் 13வது திருத்தத்திற்கு அமைவாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் உட்பட திறம்பட செயற்படுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது,

இதேவேளை கடந்த காலத்தை கையாள்வதில் ஒரு விரிவான அணுகுமுறையின் முக்கியத்துவம், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், மனித உரிமை மீறல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும், குணப்படுத்துதல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு நீதி வழங்கவும் வலியுறுத்தப்பட்டது.

Popular

More like this
Related

அடுத்த 36 மணித்தியாலங்களில் வானிலையில் மாற்றம்!

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (06) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட அடுத்த...

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு 950 தொன் நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு.

டித்வா புயல் தாக்கத்தினால் பாரிய இழப்புகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்காக தமிழ்...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான வழிமுறைகள்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான...

இந்தியா வரலாற்றில் ஒரு கருப்பு நாள்: பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் இன்று!

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. டிசம்பர் 6, 1992...