ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வு ஆரம்பம்: இலங்கை மீதான விவாதம் இன்று

Date:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 51வது அமர்வு இன்று (செப்டம்பர் 12) ஆரம்பமாகி, ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மேலும், இன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

உள்ளூர் மனித உரிமைகள் நிலைமை பற்றிய விரிவான அறிக்கைக்கு கூடுதலாக 46/1 தீர்மானத்தின் முன்னேற்ற மதிப்பாய்வு நடத்தப்படும்.

ஐ. நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பிரதிநிதியாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி  மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் இந்த அமர்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...