ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் கண்டி கட்டுகெலே ஜும்ஆ மஸ்ஜிதிற்கு விஜயம்!

Date:

இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர்  காலித் அல்- அமெரி மற்றும் துணைத் தூதுவர்  சைஃப் யூசிப் அல் நக்பி ஆகியோர் கட்டுகெலே ஜும்மா மஸ்ஜிதிற்கு நேற்று  விஜயம் செய்தனர்.

கண்டி  கட்டுகெலே ஜும்ஆ  மஸ்ஜித் தலைவர் அப்சல் மரிக்கார் அவர்களின் அழைப்பின் பேரில் மஸ்ஜிதில் உள்ள நல்லிணக்க நிலையத்திற்கு விஜயம் செய்தனர்.

தூதுவர்  நல்லிணக்க நிலையம்  முயற்சியால் மிகவும் ஈர்க்கப்பட்டதுடன்  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில்  பல்வேறு தேசிய இனங்கள் மற்றும் சமூகங்கள் மத்தியில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கிறது.

இதேவேளை கண்டி மாவட்ட ஜம்மியதுல் உலமா, கண்டி மாவட்ட மஸ்ஜித் சம்மேளனம், கண்டி முஸ்லிம் வர்த்தகர் சங்கத்தின் தலைவர்கள் உட்பட கண்டி நகரின் முக்கிய பங்குதாரர்கள், கட்டுகெல்லை ஜும்மா மஸ்ஜித் நிர்வாக சபை உறுப்பினர்கள்  பலரும் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...