எதிர்வரும் காலப்பகுதியில் கோதுமை மாவின் விலை குறைவடையும் என அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
துருக்கி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் முன்பதிவு செய்யப்பட்ட கோதுமை எதிர்வரும் 10 நாட்களில் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அண்மையில் இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு நிறுவனங்களும் கோதுமை மா இறக்குமதியை கட்டுப்படுத்தியதுடன், இந்தியா கோதுமை மா ஏற்றுமதியை தடை செய்ததால் இலங்கையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 400 ரூபாவை கடந்தது.
இதனால் பேக்கரி உற்பத்திகளை முன்னெடுப்பதற்கு பாரிய பிரச்சினை ஏற்பட்டதுடன், அதன் விலைகளை அதிகரிப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இந்நிலைமையை கருத்திற் கொண்டு துருக்கி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்ய அத்தியாவசிய உணவுகள் இறக்குமதியாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
நாட்டின் பிரதான கோதுமை மா விநியோக நிறுவனங்கள் இரண்டும், கடந்த காலங்களை இறக்குமதிகளை நிறுத்தியிருந்தன.
இதனால், கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், அதன் விலைகள் 300 முதல் 400 ரூபாய் வரையில் அதிகரித்தது.