சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை குழுக்கள் விழிப்புடன்…!

Date:

(File Photo)

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக வெள்ள அபாயம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 35 கடற்படை நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அதன்படி, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக 26 நிவாரணக் குழுக்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

காலி, தங்காலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளை உள்ளடக்கும் வகையில் 09 நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை தேவைக்கு ஏற்ப அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பில் நிவாரணக் குழுக்கள் வைக்கப்பட்டு மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...