துருக்கி மற்றும் துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவை அடுத்த சில நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அதற்கமைய தேவையான மா இறக்குமதி செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் குறிவைக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அதேநேரம் 65 ரூபாயாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டையின் விலை தற்போது 50 ரூபாய்க்கும் குறைந்த விலையில் வாடிக்கையாளருக்கு கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.