பெண்களின் சுகாதார துவாய்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது!

Date:

பெண்களுக்கான சுகாதாரப் பொருட்களுக்கான வரியை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய  புதன்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கீதா குமாரசிங்க, சுகாதாரப் பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சானிட்டரி நாப்கின்களின் விலையை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கீதா குமாரசிங்க  தெரிவித்தார்.

துறைமுகம் மற்றும் விமான சேவை வரிகள், சுங்க கட்டணம், மற்றும் செஸ் வரிகள் குறைக்கப்படும் போது, ​​விற்பனையாளர்கள் சானிட்டரி நாப்கின்களை விற்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும்  தெரிவித்தார்.

சுகாதார துவாய்கள் விலை அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாதாந்தம் 150 ரூபாவிற்கு சுகாதார துவாய்களை வழங்க இலங்கை உற்பத்தியாளர் இணங்கியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது அதற்கான விலை குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நிதியமைச்சு வெளியிட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...