மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சுக்கு 100 மில்லியன் டொலர்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்துள்ள பிரேரணையானது, இலங்கையின் வர்த்தக தலைநகரான கொழும்பை அபிவிருத்தி செய்வதற்காக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடமிருந்து பெறப்பட்ட நிதியை அத்தியாவசிய மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கமும் மருத்துவமனைகளில் நிலைமை மோசமடைந்து வருவதை ஒப்புக் கொண்டுள்ளது.