மறைந்த அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வரின் நினைவேந்தல்!

Date:

இலங்கை  பாராளுமன்றத்தின் உறுப்பினராக அமைச்சராக நீண்ட காலம் பணிபுரிந்தவரும், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மொழி பெயர்ப்பாளரும் இலங்கை முஸ்லிம் வரலாற்றில் ‘வாழ்வோரை வாழ்த்துவோம்’ என்ற நிகழ்ச்சித்திட்டத்தின முன்னோடியுமான மர்ஹும் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் மறைந்து 5 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது.

இதனை முன்னிட்டு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தினால் நேற்று 31 ஆம் திகதி அன்னாரின் நினைவுப் பேருரை நிகழ்ச்சி முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் சுஹைர் முகமது ஹம்தல்லாஹ் செய்த் கலந்துகொண்டார்.

கௌரவ அதிதிகளாக கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர், அல்ஹாஜ் எம்.டி.எம்.இக்பால் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

நினைவுப் பேருரையை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க வழங்கினார்.

இதேவேளை மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வரின் நினைவாக தேவையுடைய சில மாணவர்களுக்கு புலைமைப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...