மறைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் பிரதமருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 63வது நினைவு தினம் இன்று (26) ஹொரகொல்ல பண்டாரநாயக்க சமாதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வு மிகவும் நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், மறைந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 22ஆவது நினைவு தினம் மற்றும் மறைந்த அமைச்சர் அநுர பண்டாரநாயக்கவின் 14ஆவது நினைவுதினமும் இங்கு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, லசந்த அழகியவண்ண, பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாப்பா, துமிந்த திஸாநாயக்க, குமார் வெல்கம, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பாண்டு பண்டாரநாயக்க, ஜீவன் குமாரதுங்க, பீலிக்ஸ் பெரேரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அத்தோடு பண்டாரநாயக்கவின் மகள்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுனேத்ரா பண்டாரநாயக்க, கலந்துகொண்டனர்.