இன்று (ஒக்டோபர் 27) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பல அமைச்சுக்களின் எல்லைகளை மீளாய்வு செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இருந்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நிதி அமைச்சகத்தின் மேற்பார்வையில் இருந்த நிறுவனங்களின் பதிவாளர் துறை, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை ஆகியவை சம்பந்தப்பட்ட அமைச்சகங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, முன்னர் விவசாய அமைச்சின் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இலங்கை பொஸ்பேட் நிறுவனம் மற்றும் கைத்தொழில் அமைச்சின் கீழ் நடத்தப்பட்ட ரோபோட்டிக் பயன்பாடுகளுக்கான சிறந்த மையம் என்பன இனி மேற்படி அமைச்சுகளின் கீழ் இயங்காது.
இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களை பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பில் இருந்து நீக்கி, தொழில்நுட்ப அமைச்சின் கீழ் கொண்டுவரும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு அமைச்சராகவும் தொழில்நுட்ப அமைச்சாகவும் உள்ளார்.
இந்தநிலையில், தொழில்நுட்ப அமைச்சு, ஒழுங்குமுறை செயல்முறையை வடிவமைத்தல், பொது நலன்களைப் பாதுகாத்தல் மற்றும் அதிகரித்து வரும் போட்டிச் சந்தையில் சவால்களுக்குப் பதிலளிப்பதன் மூலம் தொலைத்தொடர்பு துறையில் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் அவர் வெளியிட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.