இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு!

Date:

மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இசை நிகழ்ச்சி ஒன்றின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொங்கோ தலைநகர் கின்ஷாசாவில் உள்ள தியாகிகள் அரங்கத்தில் கொங்கோ பாடகர் பாலி இபுபாவின் இசை நிகழ்ச்சிக்காக 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குவிந்த நிலையில், அதில் இரசிகர்கள் பலர் விஐபி இருக்கைகள் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளில் முண்டியடித்துக் கொண்டு போய் அமர்ந்தனர்.

80 ஆயிரம் பேர் அமரும் அரங்கில் அதை விட அதிகமானோர் குவிந்ததால் நெருக்கடி ஏற்பட்டதோடு, அரங்கத்திற்கு வெளியேயும் நீண்ட வரிசையில் பலர் காத்துக்கிடந்தனர்.

இதன்போது. அரங்கத்திற்கு வெளியே இருந்த கட்டுக்கடங்காத கூட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதில் 2 பொலிஸார் உட்பட 11 பேர் உயிரிழந்ததுடன், 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...